Latest News :

டி.ராஜேந்தர் பாணியில் காதலால் ரசிகர்களை உருக வைக்க வருகிறது ‘உதிர்’!
Thursday February-27 2020

காலங்கள் மாறினாலும் சரி, மனிதர்களின் வாழ்க்கை முறை மாறினாலும் சரி, காதல் என்ற ஒன்று மட்டும் எப்போதும் மாறாது. எந்த காலக்கட்டத்திலும் காதல் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருப்பார்கள், அப்படிப்பட்ட ரசிகர்களோடு அனைத்து தரப்பு ரசிகர்களையும் டி.ராஜேந்தர் பாணியில் காதலால் உருவ வைக்க வருகிறது ‘உதிர்’.

 

அறிமுக இயக்குநர் ஞான ஆரோக்கியராஜா கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குவதோடு, இப்படத்தின் பாடல்களை எழுதி படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இவர் பள்ளியில் படிக்கும் போதே, டி.ராஜேந்திரன் ‘ஒருதலை ராகம்’, ‘இரயில் பயணங்களில்’ போன்ற படங்களை பார்த்துவிட்டு, அவரைப் போலவே பாடல்கள் எழுதி படம் இயக்க வேண்டும், என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அந்த நாள் முதல் சினிமா மீது தீராத காதல் கொண்ட ஞான ஆரோக்கியசாமி, தனது முதல் படமான ‘உதிர்’ மூலம் காதலர்களை உருக வைக்கப் போகிறார்.

 

பணக்கார வாலிபனுக்கும், கால் இல்லாத பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலும், அதனை சுற்றி நடைபெறும் சம்பவங்களும் தான் ‘உயிர்’ படத்தின் கதை. கரு எளிமையாக இருந்தாலும், தனது திரைக்கதை, காட்சிகள் மற்றும் வசனம் மூலம் இப்படத்தை வலிகள் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வலிமையான காதல் படமாக ஞான ஆரோக்கியராஜா இயக்கி வருகிறார்.

 

சரவணன், சதீஷ் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கும் இப்படத்தில் மனிசா, மீனா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் தேவதர்ஷினி, ஓ.எஸ்.மணி, மனோபாலா, சிங்கம்புலி, நெல்லை சிவா, போண்டா மணி உள்ளிட்ட பல முன்னணி நட்சட்த்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

அரவிந்த் ஸ்ரீராம் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜோ ஒளிப்பதிவு செய்கிறார். சார்ப் ஆனந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ரஞ்சித், உன்னி மேனன், திப்பு, வைக்கம் விஜயலெட்சுமி ஆகியோர் இப்படத்தின் பாடல்களை பாடியிருக்கிறார்கள்.

 

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கியராஜா, புகழேந்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் உள்ள இப்படம் விரைவில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் காதல் படங்களின் பட்டியலில் இடம் பிடிக்க வர உள்ளது.

Related News

6251

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery