கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அசுரகுரு’. இதில் ஹீரோயினாக மகிமா நம்பியார் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, மனோபாலா, ஜெகன், இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வில்லனாக நாகிநீடு நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சுபராஜு நடித்திருக்கிறார்.
ஜே.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி ராஜ்தீப் இயக்கியுள்ளார். கபிலன் வைரமுத்து, சந்துரு, மாணிக்கவாசகம் ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர். கணேஷ் ராகவேந்திரா இசையமைக்க, ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படம் குறித்து கூறிய இயக்குநர் ராஜ்தீப், “இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் ஒரு தேடல் இருக்கும். சிலருக்கு புகழின் மீது தேடல், சிலருக்கு அதிகாரத்தின் மீது தேடல் என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். ஆனால், ‘அசுரகுரு’ ஹீரோ சக்தியின் தேடல் என்பது பணம், பணம் மட்டும் தான். ஏன் இந்த தேடல், எதற்காக இந்த தேடல் என்பது தான் படத்தின் கதை.” என்றார்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளோடு, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ’அசுரகுரு’ வரும் மார்ச் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...