‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. அப்படத்தை தொடர்ந்து, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டன் லோக்கல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் ஷாலு ஷம்மு, தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும், அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷாமு வெளியிடுகிறார். வைரலாகும் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான நெட்டிசன்கள் லைக் போடுவது ஆதரவாக கமெண்ட் போடுகிறார்கள். பலர், ஷாலுவுக்கு அறிவுரை கூறுவது போலவும் கமெண்ட் போடுகிறார்கள்.
யார் எப்படி போட்டாலும், தனது கவர்ச்சியில் தாராளத்தை காட்டுவதை மட்டும் ஷாலு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார். அந்த வகையில், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்திற்காக ஷாலு ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டார். அதில் அவர் முழு நிர்வாண கோலத்தில் இருக்க, அவரது முக்கியமான உடல் பாகங்களை ரோஜா இதழ்களால் மறைக்கப்பட்டு இருக்கும். இந்த புகைப்படம் வெளியாகி பெரும் வைரலானது.
இந்த நிலையில், பிரபல டிவி சேனல் ஒன்றின் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக கலந்துக் கொண்ட நடிகை ஷாலு ஷம்முவின் புகைப்படங்களை பெரிய திரையில் காட்டி, அவர் போஸ் கொடுப்பது போல, போட்டியில் கலந்துக் கொண்டவர்கள் போஸ் கொடுக்க வேண்டும் என்ற டாஸ்க் நடத்தப்பட்டது. அப்போது, ஷாலுவின் கவர்ச்சி புகைப்படங்கள் திரையில் வெளியிட, அதில் அவர் நிர்வாணமாக இருந்த புகைப்படமும் வெளியிடப்பட்டது. அதை பார்த்த ஷாலு ஷம்மு அப்செட் ஆகிவிட்டார்.
மேலும், கடும் கோபத்தோடு, என்ன பன்றிங்க, இந்த புகைப்படத்தை இங்கு வெளியிட தேவையே இல்லையே” என்று கூறியதோடு, நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிவிட்டார். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
இதோ அந்த வீடியோ,
ஷாலு ஷம்முவை கடுப்பேத்தி Walkout பண்ண வெச்சிட்டாங்க காமெடி கேங்ஸ்டர்ஸ்!🚶♀
— Zee Tamil (@ZeeTamil) February 28, 2020
காமெடி கேங்ஸ்டர்ஸ்
வரும் ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு#ComedyGangsters #ZeeTamil pic.twitter.com/JOS0Q1w3Tx
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...