80 களில் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்தியா சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் ராதிகா. சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர், தொலைக்காட்சி தொடர்கள் மூலமாகவும் பெரும் புரட்சியை உருவாக்கினார். தற்போது ‘சித்தி 2’ சீரையலை தொடங்கியிருக்கும் ராதிகா, அதன் ஆரம்பத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று அனைவரையும் வியப்படைய செய்தார்.
நடிகை ராதிகா இரண்டு திருமணம் செய்துக் கொண்டாலும் இரண்டுமே விவாகரத்தில் முடிந்த நிலையில், மூன்றாவதாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சரத்குமாருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். அவரது முதல் மனைவிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் வரலட்சுமி. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் வில்லி, குணச்சித்திர வேடம், ஹீரோயின் என்று வரலட்சுமி நடித்து வருகிறார்.
தமிழில் சுமார் அரை டசன் படங்களில் வரலட்சுமி நடித்திருந்தாலும், அந்த படங்கள் ரிலீஸ் ஆவதில் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராதிகா குறித்து பேசிய வரலட்சுமி, ”நான் ராதிகா அவர்களை ஆண்ட்டி என்று தான் அழைப்பேன் ஏனென்றால் அவர்கள் எனது தாய் கிடையாது. அவர் எனது அப்பாவின் இரண்டாவது மனைவி, எனக்கு தாய் என்றால் அது ஒருவர் மட்டும் தான். ஏன் அனைவருக்கும் ஒரே ஒரு தாய் தான். மேலும் அதனால் அவர் எனக்கு அம்மா கிடையாது, அவர் எனக்கு ஆண்ட்டி தான்.” என்று கூறினார்.
வரலட்சுமியின் இந்த பேட்டி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல், சத்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வரலட்சுமிக்கு ஒரு அப்பாவாக செய்ய வேண்டிய உதவிகளை நான் செய்ய தவறிவிட்டேன், என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...