தஞ்சை மக்களின் நட்சத்திரமாக திகழ்ந்து வந்த துரை சுதாகர், ‘களவாணி 2’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவில் பப்ளிக் ஸ்டாராக வலம் வருகிறார். சினிமாவில் நடிக்க தொடங்கிய பிறகு தான் நடிகர்களுக்கு ரசிகர்கள் பட்டப் பெயர் கொடுப்பார்கள். ஆனால், இவருக்கோ, இவர் செய்யும் சமூக பணிக்காக, நடிகராவதற்கு முன்பாகவே தஞ்சை மக்கள் பப்ளிக் ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கி விட்டார்கள்.
தற்போது தஞ்சை மண்ணை தாண்டி தமிழகம் முழுவதும் பப்ளிக் ஸ்டார் நடிகர் துரை சுதாகராக அறியப்பட்டிருக்கும் இவர், நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், தனது சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இளைஞர்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா பற்றி மக்களிடம் எடுத்துரைத்ததிலும், அந்நிகழ்வு குறித்து உலக தமிழகர்கள் அறிந்துக் கொள்ளும் வகையிலும், நடிகர் துரை சுதாகர் மற்றும் அவரது ரசிகர் மன்றத்தினர் பல்வேறு பணிகளை செய்தார்கள். அப்பணிகள் குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்தியும் வெளியானது.
அதேபோல், மரக்கன்றுகள் நடுவது குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, காதலர் தினத்தன்று திரைப்படம் பார்க்க தியேட்டருக்கு வந்த இளைஞர்களுக்கும், காதல் ஜோடிகளுக்கும் மரக்கன்றுகளை துரை சுதாகர் வழங்கினார். மேலும், சமீபத்தில் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கி கெளரவித்தவர், போட்டியில் கலந்துக்கொண்ட இளைஞர்களுக்கு, ஜெர்ஸி, சாட்ஸ் உள்ளிட்ட ஆடைகளையும் வழங்கினார்.
இந்த நிலையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள முன்னணி கல்லூரியான கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் ‘திறமைகளின் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில், மாணவர்கள் தங்களிடம் இருக்கும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்கள். இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும், என்றால் தஞ்சை மண்ணை பொருத்தவரை முதலில் நினைவுக்கு வருபவர் துரை சுதாகர், என்பதால் அவரையே கிங்ஸ் கல்லூரி நிர்வாகம் சிறப்பு விருந்தினராக அழைத்தது. அவருடன் இயக்குநர் சற்குணமும் கலந்துக் கொண்டார்.
மாணவர்களின் திறமைகளை பார்த்து அவர்களை பாராட்டியதோடு நின்றுவிடாமல், அவர்கள் தங்களது திறமைகளை எப்படி மெருகேற்றுவது, அதை வெளி உலகிற்கு எப்படி தெரியப்படுத்துவது, பற்றி பேசிய நடிகர் துரை சுதாகர், இளைஞர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் தான் எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மாணவர்கள் முன்பு பேசிய இயக்குநர் சற்குணம், இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் என்பதால், அவர்கள் படிப்பை மட்டும் சார்ந்திருக்காமல், இதுபோன்ற கூடுதல் திறமைகளையும் வளர்த்துக் கொள்வது அவர்களது எதிர்காலத்திற்கு சிறப்பானதாக இருக்கும், என்றார்.
கல்லூரி செயலாளர் ராஜேந்திரன், முதல்வர் அற்புதா விஜயா செல்வி, பேராசிரியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் ‘திறமைகளின் சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...