’கபாலி’ யை தொடர்ந்து ‘காலா’ மூலம் ரஜினிகாந்தை இரண்டாவது முறையாக பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையின் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பெப்ஸி தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதால், தற்போது ஒரு நாளைக்கு 12 முதல் 13 மணி வரை என படப்பிடிப்பை வேகமாக நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், ‘காலா’ படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் பாலிவுட் நடிகை ஹுமா குரேசி, படப்பிடிப்பில் இருந்து பாதியில் எஸ்கேப் ஆகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பாலிவுட் நடிகர் சூனு சூத் நடத்தும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஹுமே குரேசி, காலா படப்பிடிப்பில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளாராம். இது தொடர்பாக படக்குழுவினரிடம் முறையாக அவர் அனுமதி பெற்று விடுமுறை எடுத்துக்கொண்டாலும், வேகமாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ஹீரோயின் திடீரென்று கம்பி நீட்டியிருப்பது படக்குழுவினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.
இருந்தாலும், அவர் விருது விழாவில் பங்கேற்பதில் உறுதியாக இருப்பதாலும், இந்த விவகாரத்தில் மேலும் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக அவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...