தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ராதிகா, சீரியல் உலகிலும் முன்னனி நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். இவர் தயாரித்து நடித்த ‘சித்தி’ சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. டி.ஆர்.பி-யில் பல வருடங்கள் இந்த சீரியல் தான் முதலிடத்தில் இருந்தது.
சித்தி சீரியலை தொடர்ந்து மேலும் பல சீரியல்களை தயாரித்து நடித்து வந்த ராதிகா, தான் தயாரித்த சரித்திரக்கால சீரியல் ஒன்று டி.ஆர்.பி-யில் பின் தங்கியிருந்ததால் அந்த சீரியலை பாதியில் நிறுத்தியதோடு, சன் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி, வேறு ஒரு தொலைக்காட்சிக்காக கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதற்கிடையே, சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியல் பக்கம் திரும்பிய ராதிகா ‘சித்தி 2’-வுடன் கலம் இறங்கினார். முதல் வாரத்திலேயே ‘சித்தி 2’ சீரியல் டி.ஆர்.பி-யில் முதல் ஐந்தில் இடம்பிடித்தது. இதனால், ராதிகா உள்ளிட்ட ‘சித்தி 2’ குழுவின உற்சாகமடைந்தனர்.
இந்த நிலையில், ‘சித்தி 2 சீரியல் முதல் ஐந்தில் இருந்து வெளியேறியுள்ளது. முதல் எப்பிசோடுக்குப் பிறகு, அடுத்தடுத்த எப்பிசோட்கள் டி.ஆர்.பி-யில் சரிந்ததால், சித்தி 2 சீரியலுக்கு முதல் ஐந்தில் இடம் கிடைக்காமல் போனது. சீரியலில் மிகப்பெரிய வெற்றிகளை பார்த்த ராதிகாவுக்கு, கடந்த சில ஆண்டுகளாக சீரியல் மூலம் பல சோதனைகள் வருகிறது. அந்த வகையில், சித்தி 2 சீரியலும் தற்போது டி.ஆர்.பி-யில் இறங்குமுகமாக இருப்பதால், ‘சித்தி 2’ குழு ரொம்பவே அப்செட்டாகியுள்ளார்களாம்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...