அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரை வைத்து ‘தள்ளி போகதே’ படத்தை இயக்கி வரும் ஆர்.கண்ணன், சந்தானத்தை ஹீரோவாக வைத்து ‘பிஸ்கோத்’ என்ற படத்தை இயக்குவதோடு, சொந்தமாக தயாரித்தும் வருகிறார். ‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’ என ஆர்.கண்ணன் படங்களில் காமெடி நடிகராக நடித்த சந்தானம், ’பிஸ்கோத்’ மூலம் ஆர்.கண்ணன் இயக்கத்தில் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கிறார்.
பிஸ்கட் கம்பெனியில் சாதாரண பணியில் இருக்கும் ஒருவர் எப்படி உயர் பதவிக்கு செல்கிறார், என்பதே இப்படத்தின் கதை. இதில் தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆனந்த்ராஜ், ‘மொட்ட’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் உள்ளிட்ட பலர் நடிக்க, செளகர் ஜானகி சந்தானத்தின் பாட்டியாக நடிக்கிறார். இது அவருக்கு 400 வது படமாகும்.
மேலும், இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் சந்தானம், ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமல் போட்ட வேடத்தையும் போட்டிருக்கிறார். அந்த வேடத்தில் அந்த கால பாணியில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது. அதேபோல், ஐதராபாத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உள்ளதுபோல் அரண்மனை தளம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது.
இசையமைப்பாளர் ரதன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்தவர். நாம் எதிர்பார்ப்பதை அப்படியே கொடுக்கும் திறமைசாலி. 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...