Latest News :

தியேட்டர்கள் அதிகரிப்பு! - உற்சாகத்தில் ‘கன்னி மாடம்’ படக்குழு
Thursday March-05 2020

நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில், ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியான படம் ‘கன்னி மாடம்’. ஆணவ கொலைக்கும், சாதி வெற்றிக்கும் எதிரான கருத்தை மிக யதார்த்தமாகவும், அழகியலோடும் பதிவு செய்த இப்படத்தை ஊடகங்கள் வெகுவாக பாராட்டியதோடு, தொல்.திருமாவளவன், கீ.வீரமணி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், கார்த்திக் சுப்புராஜ் உட்பட பலரும் பாராட்டினார்கள்.

 

ஊடகங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் இயக்குநர்களின் பாராட்டு மட்டும் இன்றி ரசிகர்களின் அமோக வரவேற்பையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கன்னி மாடம்’ படத்திற்கு நாளை (மார்ச் 6) மேலும் 30 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது வாரத்தில் ஒரு திரைப்படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்குவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. தமிழ் சினிமாவில் வாரம் சுமார் 6 திரைப்படங்கள் வெளியாவதால் தியேட்டர் கிடைக்காமல் பல திரைப்படங்கல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவது வாரத்தில் ‘கன்னி மாடம்’ படத்திற்கு கூடுதலாக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருப்பது படக்குழுவினரை உற்சாகமடைய செய்திருக்கிறது.

 

இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக், ஹீரோயினாக நடித்த சாயா தேவி இருவருடைய நடிப்பும் வெகுவாக பாராட்டபட்டதோடு, ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணியம் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைத்து கதாப்பாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்ததும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

Related News

6274

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery