Latest News :

நடிப்புக்கு கிடைத்த பாராட்டு! - மகிழ்ச்சியில் ‘கன்னி மாடம்’ ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக்
Thursday March-05 2020

தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் பற்றாக்குறை இருப்பதாக சில இயக்குநர்கள் புலம்புவதுண்டு. ஆனால், அது உண்மை இல்லை என்பதை அவ்வபோது சில வளரும் ஹீரோக்கள் நிரூபிப்பார்கள். அப்படி ஒருவராக ‘கன்னி மாடம்’ பட ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் அறியப்பட்டிருக்கிறார்.

 

நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியான ‘கன்னி மாடம்’ ஆணவக் கொலை மற்றும் சாதி வெறி பற்றி மிக அழுத்தமாகவும், அதே சமயம் எந்தவித ஒருதலை பட்சமும் இன்றி பேசப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது வாரமாக வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றிக்கு திரைக்கதை எப்படி முக்கியமோ, அதுபோல் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக்கின் நடிப்பும் முக்கியமனாதக அமைந்திருக்கிறது.

 

Sriram Karthik

 

மிக அழுத்தமான கதாப்பாத்திரத்தில், மிக இயல்பாக நடித்து பாராட்டு பெற்றிருக்கும் ஸ்ரீராம் கார்த்தி, ஏற்கனவே ’வண்டி’, ‘உச்சத்துல சிவா’, ‘13 ஆம் பக்கம் பார்க்க’, ‘சபாஷ் சரியான போட்டி’ ஆகிய படங்களில் ஹீரோவாகவும், இரண்டாவது ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இருந்தாலும், ‘கன்னி மாடம்’ திரைப்படம் தான் ஸ்ரீராம் கார்த்திக்கின் நடிப்பு திறமையை முழுவதுமாக வெளிக்காட்டியுள்ளது. படத்தை பாராட்டும் பிரபலங்களும், ரசிகர்களும் ஸ்ரீராம் கார்த்திக்கின் நடிப்பையும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

 

திருச்சியை சேர்ந்த ஸ்ரீராம் கார்த்திக், கல்லூரி படிக்கும் போது மேடை நாடகம் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த நாடகத்தை பார்த்து தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்ரீராம் கார்த்திக், தனது திறமையை வெளிக்காட்ட சரியான தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்க, போஸ் வெங்கட் மூலம் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்து, அதை மனுஷன் சரியாக பயன்படுத்திக் கொண்டிருப்பதோடு, தன்னால் எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க முடியும், என்றும் நிரூபித்துள்ளார்.

 

Sriram Karthik

 

தற்போது ‘மங்கி டாங்கி’ என்ற படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் ஹீரோவாக நடித்து வருகிறார். ஜித்து ஜோசப்பிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அபி சலீஷ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். ‘கன்னி மாடம்’ படத்தை தயாரித்த ஹசீர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

 

மேலும், ஜெய் ஹீரோவாக நடிக்கும் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கும் ஸ்ரீராம் கார்த்திக், சுசீந்திரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அஸ்வின் பரத் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இவற்றுடன் மேலும் சில படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம்.

Related News

6275

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery