தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சமந்தா, திருமணத்திற்குப் பிறகு தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இது தொடர்பாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது.
இந்த நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் கர்ப்பமடைந்திருப்பதால் தான் படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...