‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான மதுமிதா, தொடர்ந்து தனது காமெடி திறமையால் பல படங்களில் நடித்து வந்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்ட மதுமிதா, பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசியதோடு, தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால், அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு, விஜய் டிவி மீது பல்வேறு புகார்களை கூறியவர், காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
தனக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காக மிகப்பெரிய சட்ட போராட்டத்தை நடத்திய் மதுமிதா, தற்போது ட்விட்டர் பக்கத்தில் பல காட்டமான பதிவுகளை வெளியிடுகிறார்.
இந்த நிலையில், மகளிர் தினம் தொடர்பாக சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் மதுமிதா, “பெண் தன் தனிப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கிறாள். அவளுக்கான சுதந்திரத்தை யாரும் அனுமதிக்க அவசியமில்லை. சரியோ தவறோ அவளே கடந்து போவாள்.
உங்கள் சுட்டிக்காட்டல் அறிவுப் பூர்வமாக இருக்கட்டும். விமர்சிக்கிறேன் என காயப்படுத்தினால் ஏறி மிதித்துக் கடந்து போவேன். இனிய மகளிர் தின வாழ்த்துகள்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதில் இருந்து, மதுமிதாவின் கோபம் இன்னும் குறையவில்லை என்று நன்றாகவே தெரிகிறது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...