சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படம் காமெடி கலந்த காதல் படமாக உருவாகி வருகிறது. அனிருத் இசயமைக்கும் இப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...