பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சல்மான் கானின், படங்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால், இவரது படங்களில் நடிக்க பல ஹீரோயின்கள் விரும்புகிறார்கள். அதே சமயம், சல்மான் கான் அவ்வபோது சில சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வது வழக்கமான ஒன்றாகி வருகிறது.
அந்த வகையில், சில வருடங்களுக்கு முன்பு திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சல்மான் கான், நடிகை ஒருவரிடம் செய்த செயல் தற்போது வைரலாகி வருவதோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
அனில் கபூரின் மகளான சோனம் கபூர், தற்போது திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு ‘பிரேம் ரதன் தன் பயோ’ (Prem Ratan Dhan Payo) என்ற படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் சோனம் கபூரும், சல்மான் கானும் பங்கேற்றனர். அப்போது சல்மான் கானுக்கு அதிகமாக வேர்க்க தொடங்கிய நிலையில், திடீரென்று அவர், சோனம் கபூரின் உடையில் தனது முகத்தை தொடைத்தார். இதை எதிர்ப்பார்க்காத சோனம் கபூர் பெரும் அதிர்ச்சியடைந்தாலும், அந்த இடத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
சில வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வர, இதனை பார்த்த ரசிகர்கள் பலர், சல்மான் கானின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ,
Bhai bhai 😂🤣 @BeingSalmanKhan pic.twitter.com/twzNtXuPoR
— Dope'licate Reddy (@TheDopelicate) March 6, 2020
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...