டிஜிட்டல் இந்தியா கொள்ளையை தூக்கி பிடிக்கும் மத்திய அரசு, அதனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மோசடிகள் குறித்து பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அந்த வகையில், ஆன்லைன் வர்த்தகம் மூலம் நடைபெறும் பல்வேறு மோசடிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை நடிகர் விஷால் ஏற்படுத்த உள்ளார்.
அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து, தயாரித்திருக்கும் படம் ‘சக்ரா’. இதில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா காசண்ட்ரா முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்படும் மோசடிகள் குறித்து பேசும் இப்படத்தை, தொழில்நுட்ப திரில்லர் ஜானர் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகள் குறித்து இதுவரை மக்கள் அறியப்பட்டாத பல்வேறு விஷயங்களை பேசியிருப்பதோடு, அதில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்ற அறிவுரையும் கூறியிருகிக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியமும், படத்தொகுப்பை சமீர் முகமதுவும் பார்த்துக் கொள்கிறார்கள். கலையை எஸ்.கண்ணன் கவனிக்க, சண்டைக்காட்சிகளை அனல் அரசு அமைத்துள்ளார்.

இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்னணியும், முக்கியத்துவமும் இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் நடத்தப்பட்டது.
தற்போது அனைத்து பணிகளையும் விரைவில் முடிப்பதற்காக தீவிரமாக பணியாற்று வரும் ‘சக்ரா’ படக்குழுவினர் படத்தை மே 1 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...