Latest News :

காதலியால் அடி உதை வாங்கிய பிக் பாஸ் பிரலம்! - வைரலாகும் வீடியோ
Monday March-09 2020

சினிமா நடிகர்கள் மற்றும் டிவி நடிகர்களுக்கு இணையாக பிக் பாஸ் போட்டியில் கலந்துக் கொண்டவர்கள் பிரபலமடைந்து வருகிறார்கள். இதனால், அவர்கள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் உள்ளிட்ட பல தகவல்கள் வைரலாகி வரும் நிலையில், பிக் பாஸ் பிரபலங்களின் காதல் விவகாரங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

 

இதில், சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது தர்ஷன் - சனம் ஷெட்டி காதல் விவகாரம் தான். தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி, தர்ஷன் ஏமாற்றி விட்டதாக சனம் ஷெட்டி போலீசில் புகார் கூற, அவர் மீது தர்ஷன் பல திடுக்கிடும் புகார்களை கூறினார். தற்போது வரை இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை.

 

இந்த நிலையில், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3-யின் வெற்றியாளரான பின்னணி பாடகர் ராகுல், தனது காதலியால் பார்ட்டி ஒன்றில் அடி உதை வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தனது காதலியுடன் கடந்த வியாழக்கிழமை கச்சிபோலி என்ற இடத்தில் உள்ள பப் ஒன்றுக்கு ராகுல் சென்றுள்ளார். அப்போது காதலியுடன் ராகுல் நடனம் ஆடிய போது, அவரது காதலியிடம் சிலர் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களை ராகுல் தடுத்த போது, இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, கை கலப்பில் முடிந்துள்ளது.

 

அப்போது, ராகுலை சிலர் பீர் பாட்டிலால் சரமாறியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ராகுலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராகுலை தாக்கியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

தற்போது வைரலாகும் அந்த வீடியோ இதோ,

 

Related News

6286

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery