‘மின்னலே’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கெளதம் மேனன், ’காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்று தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, தனக்கென்று தனி ரசிகர்கள் வட்டத்தைக் கொண்ட இயக்குநராகவும் வலம் வருகிறார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பெரிய எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியானாலும், எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேபோல், விக்ரமை வைத்து அவர் இயக்கிய ’துருவ நட்சத்திரம்’ படம் வெளியாகமல் இருப்பதும் அவருக்கு இயக்குநராக பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது.
இதற்கிடையே, ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து கெளதம் மேனன் இயக்கிய ‘குயின்’ என்ற வெப் சீரிஸ் பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாவது சீசனை இயக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டுகிறது.
இந்த நிலையில், கமலை வைத்து இயக்கி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியிலும் கெளதம் மேனன் இறங்கியுள்ளாராம். இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சு வார்த்தை தற்போது தொடங்கியுள்ளதாம். இதில் ஹீரோவாக கமல் தான் நடிக்கப் போகிறாராம்.

தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் கமல் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது தடைப்பட்டுள்ளது. இருப்பிலும், படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படம் முடிந்த பிறகு தலைவர் இருக்கிறான் படத்தில் நடிக்கும் கமல், அதன் பிறகு ‘வேட்டையாடு விளையாடு 2’ படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...