விஷாலின் வித்தியாசமான நடிப்பில், மிஷ்கினின் இயக்கத்தில் கடந்த வியாழக்கிழமை வெளியான ‘துப்பறிவாளன்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
மிஷ்கின் ஸ்டலில் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் டிடெக்டிவ் படமான இப்படம் தமிழகம் மட்டும் இன்றி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், ‘துப்பறிவாளன் 2’-வில் மீண்டும் மிஷ்கினுடன் இணைவேன் என்று விஷால் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், ‘துப்பறிவாளன்’ படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், விஷால் மற்றும் இயக்குநர் மிஷ்கினை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் ஷங்கர் , “துப்பறிவாளன் இயக்குநர் மிஷ்கினின் தனித்துவமான ஸ்டைலில் உருவான மிகச்சிறந்த திர்ல்லர் திரைப்படம். விஷாலின் கதாபாத்திரம் மற்றும் அவருடைய நடிப்பு நன்றாக இருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...