சினிமா மற்றும் சீரியல் நடிகைகளிடையே ஏற்படும் கள்ளத்தொடர்பு விவகாரங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சீரிய நடிகை ஜெயஸ்ரீ, இதுபோன்ற ஒரு பிரச்சினையால் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரபல மலையாள நடிகையும், நடன இயக்குநருமான தாரா கல்யாண் மீதும் கள்ளத்தொடர்பு புகார் எழுந்துள்ளது.
தாரா கல்யாண், தனது மகள் செளபாக்யாவுடன் டிக் டாக் வீடியோ செய்து வெளியிட்டு பிரபலமடைந்தார். அந்த வீடியோ மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தார்கள்.
இதற்கிடையே, தாரா கல்யாணின் மகள் செளபாக்யாவுக்கும், வெங்கட் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், நடிகை தாராவுக்கும், அவரது மருமகன் வெங்கட்டுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், அதன் காரணமாகவே தனது மகளுக்கு வெங்கட்டை தாரா திருமணம் செய்து வைத்ததாகவும், சமூக வலைதளங்களில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இதனால் மிகவும் கவலையுற்றிருக்கும் நடிகை தாரா, இது தொடர்பாக தனது விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். கண்ணீருடன் அந்த வீடியோவில் பேசியிருக்கும் தாரா, “எனது மகளின் திருமணத்தை தனி ஆளாக நின்று நடத்தியிருக்கிறேன். கல்யாண வீடியோ கிளிப்பை போட்டோ செய்து வைரலாக்கியுள்ளார்கள்.
என்னை சோதிக்கிறீர்கள், ஆண்டவனுக்கு தெரியும், உங்கள் மனம் என்ன கல்லா? நான் மன்னிக்கவே மாட்டேன். பெண்களை பற்றி தவறாக பேசும் உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா? நீங்கள் பெண் வயிற்றில் பிறக்கவில்லையா? ஒரு பெண்ணை வேதனை படுத்தும் அளவிற்கு தான் நீங்கள் வளர்க்கப்பட்டுள்ளீரா?
சக்தி வாய்ந்த சமூக வலைதளத்தை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துங்கள், இப்படி தவறாக பயன்படுத்தி, மற்றவர்களின் குடும்பங்களை கெடுக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ,
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...