கடந்த 1996 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான படம் ‘சிறைச்சாலை’. மலையாளத்தில் ‘காலாபானி’ என்ற தலைப்பில் வெளியான இப்படத்தின், தமிழாக்கத்தை கலைப்பு எஸ்.தாணு வெளியிட்டார். இதில் மோகன்லால் ஹீரோவாக நடிக்க, பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிரபுவின் முதல் மலையாளப் படமும் இப்படம் தான்.
மிக பிரம்மாண்டமான முறையில் உருவான இப்படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அதே பிரம்மாண்டமான முறையில் பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் வரலாற்று படம் ‘மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’.
இப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்க, பிரபு முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். சிறைச்சாலை படத்திற்குப் பிறகு மோகன்லால், பிரபு சுமார் 25 ஆண்டுகள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் தமிழ் பதிப்பான ’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் வெளியிடுகிறார்.
மேலும் இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ், நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...