‘கைதி’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது பின்னணி வேலைகள் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயை வருமான வரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து விஜய், ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் பேசுவார், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம், தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவுக்கு ரசிகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் விஜய், இந்த முறை ரசிகர்களை அழைக்க வேண்டாம், என்று கூறிவிட்டாராம். இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு என்பதால், ஆறுதல் அடைந்துள்ளார்களாம்.
இந்த நிலையில், ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், விஜய் தனது அடுத்தப் படத்தின் இயக்குநர் யார்? என்பதை அறிவிக்க உள்ளாராம்.
‘மாஸ்டர்’ படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்த போது விஜய், தனது 65 வது படத்திற்காக கதை கேட்டு வந்தார். பாண்டிராஜ், சுதா கொங்கராவ், மகிழ்திருமேணி, அருண்ராஜா காமராஜ் என்று பல இயக்குநர்களின் பெயர்கள் விஜய் 65 படத்தில் அடிபட்டாலும், தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் பெயர் மட்டுமே லிஸ்ட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், லோகேஷ் கனகராஜுக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதற்கான சூழல் இருப்பதாகவும் விஜய் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
எப்படியோ, ’மாஸ்டர்’ இசை வெளியீட்டு நாளான, மார்ச் 15 ஆம் தேதி விஜயின் 65 வது படத்தை இயக்கும் இயக்குநர் யார்? என்பது தெரியப்போவது உறுதி என்பது விஜய் ரசிகர்களுக்கு கூடுதல் சர்பிரைஸ்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...