நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட ராகவா லாரன்ஸ், தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். தெலுங்கு முன்னணி ஹீரோக்களை வைத்து இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தமிழில், ‘காஞ்சனா’ சீரிஸ் படங்கள் மூலம் பெரிய ரசிகர்கள் வட்டத்தை பெற்றிருக்கும் லாரன்ஸ், அப்படங்கள் மூலம் வசூலில் பல சாதனைகள் நிகழ்த்தியிருக்கிறார்.
இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் என்கிற வினோத் மீது நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். ராகவா லாரன்ஸுடன் நடன இயக்குநராகவும், நடிகராகவும் பயணிக்கும் எல்வின், தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கும் போது, தெலுங்கு துணை நடிகை ஒருவருடன் நட்பாக பழகியிருக்கிறார். பிறகு அந்த நடிகையை காதலிப்பதாக கூற, அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
ஆனால், தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு அந்த நடிகைக்கு எல்வின் டார்ச்சர் கொடுத்தாராம். இது தொடர்பாக அந்த நடிகை போலீசில் புகார் அளிக்க, அவர் மீதே குற்றம் சாட்டி, அவரை சிறையில் அடைத்துவிட்டார்களாம். மேலும், சிறையில் வைத்தே தன்னை கொலை செய்ய எல்வின் முயற்சித்ததாக குற்றம் சாட்டியிருக்கும் அந்த நடிகை, தனது உயிருக்கு எல்வினால் ஆபத்து இருப்பதனால், தெலுங்கானா முதலமைச்சர் தனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் மீது துணை நடிகை கூறிய இந்த பரபரப்பு குற்றச்சாட்டு தற்போது தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...