இமால்யன் என்டர்டைன்மெண்ட் காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் 'ஓவியா' எனும் திரைப்படம் விரைவில் வெளியாகயுள்ளது. இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் 2 தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை 'ட்ரெண்ட் மியூசிக்' நிறுவனம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக காண்டீபன் ரங்கநாதன் அவர்களும் மற்றும் அறிமுக நாயகியாக மிதுனா அவர்களும் நடித்துள்ளனர்.
கஜன் சண்முகநாதன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கடலூரை சேர்ந்த TS மீடியா ஒர்க்ஸ் செய்து வருகிறது.
இந்த படத்தின் 'நான் பிளாட்டினம் சிலை' எனும் பாடலை பிரபல எழுத்தாளரான பாவா செல்லத்துரை அவர்கள் கடந்த மாதம் வெளியிட்டார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...