Latest News :

ரம்யா நம்பீசனின் ஹாட் லிப் லாக்! - வைரலாகும் புகைப்படம்
Tuesday March-10 2020

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் ரம்யா நம்பீசன், நடிகையாக மட்டும் இன்றி பின்னணி பாடகியாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் ஆரம்பத்தில் டிவி தொகுப்பாளினியாக தனது கலை பயணத்தை தொடங்கியவர், 1996 ஆம் ஆண்டு ‘இனியும் தும்பிக்கை பரனு வரும்’ என்ற மலையாள குறும்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு, 2000 ஆம் ஆண்டு வெளியான ‘சயஹ்னம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்தவர் தொடர்ந்து பல்வேறு மலையாளப் படங்களில் குணச்சித்திரம் மற்றும் ஹீரோயின் வேடங்களில் நடித்தார்.

 

2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நாள் ஒரு கனவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகான ரம்யா நம்பீசன், ’ராமன் தேடிய சீதை’, ‘ஆட்ட நாயகன்’, ‘பீட்சா’, ‘மெர்க்குரி’, ‘டமால் டுமில்’, ‘சேதுபதி’ என பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்து வரும் ரம்யா நம்பீசன், தமிழை பொருத்தவரை ஹோம்லியான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

 

அதே சமயம், மலையாளப் படங்களில் சற்று கவர்ச்சியாக நடிக்கும் ரம்யா நம்பீசன், 2011 ஆம் ஆண்டு வெளியான ‘சப்பா குரிஷு’ என்ற மலையாளப் படத்தில் ஹாட்டான லிப் லாக் காட்சியில் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக நடிகை நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில் நடித்திருப்பார். அவருக்கு தான் ரம்யா நம்பீசன் அழுத்தமாக லிப் லாக் கொடுத்திருப்பார்.

 

Sappa Kurushi

 

2011 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் லிப் லாக் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. காரணம், சமீபத்திய பேட்டி ஒன்றில், இந்த லிப் லாக் முத்தக் காட்சி குறித்து பேசியிருக்கும் ரம்யா நம்பீசன், ”இதற்கு முன்பு என் வாழ்க்கையில் லிப் லாக் இருந்ததில்லை. எனது முதல் லிப் லாக் ‘சப்பா குரிஷு’ படத்தில் தான் இருந்தது. இதை யாரும் நம்ப மாட்டார்கள். காட்சியைப் பற்றி சமீர் என்னிடம் சொன்னபோது, ​​எனக்கு இது தெரியாது என்று அவரிடம் தெளிவாக சொன்னேன். எனவே நான் சில திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பார்த்தேன். ‘கமினா’ படத்தில் சூடான லிப் லாக் காட்சிகள் இருந்தன, அதை தான் நான் பார்த்து கற்றுக்கொண்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

ரம்யா நம்பீசனின் இந்த பேட்டியை தொடர்ந்து, ‘சப்பா குரிஷு’ படத்தில் இடம்பெற்ற லிப் லாக் முத்தக் காட்சியை ரசிகர்கள் தேடி பார்ப்பதோடு, அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கியும் வருகிறார்கள்.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Ramya Nambeesan Lip Lock

Related News

6300

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery