Latest News :

முதல்ல சாதிவெறி, இப்போ மதவெறியா! - மோகனை சீண்டிய நெட்டிசன்
Tuesday March-10 2020

கடந்த வாரம் வெளியான ‘திரெளபதி’ மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியை முழுமையாக கொண்டாட முடியாத நிலையில் அப்படக்குழுவினர் இருக்கிறார். அப்படத்தில் நடித்த ரிச்சர்ட், ஷீலா, இயக்குநர் மோகன் உள்ளிட்ட யாரிடம் நேர்காணல் எடுத்தாலும், அவர்களை விமர்சனம் செய்வது போலத்தான் கேள்விகளை கேட்கிறார்கள். இதனால், மற்றவர்கள் எப்படியோ இயக்குநர் மோகன் கடும் கோபமடைந்துவிடுகிறார்.

 

மேலும், ஒவ்வொரு பேட்டியிலும், “இந்த பேட்டியோட, கமெண்ட பார்க்குறீங்களா....பார்க்குறீங்களா...” என்று அழுத்தமாக கேட்கிறார். மேலும், தான் எடுத்தப் படம், அதில் கூறிய கருத்து மிக சரியானது என்று அழுத்தமாக வாக்கு வாதம் செய்யும் இயக்குநர் மோகன், சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பத்திரிகையாளர்களையும் காட்டமாக சாடியிருந்தார். காரணம், தனது படத்தை சில விமர்சகர்கள் கிழி கிழி என்று கிழித்ததால் தான்.

 

இப்படி, ஊடகங்கள் வெச்சு செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், இயக்குநர் மோகன் தனது அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில், ”’திரெளபதி’ ன்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது, அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான். விரைவில் அறிவிப்பு வரும்.. காத்திருங்கள்..” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குநர் மோகன் பதிவுட்டுள்ளார்.

 

அதாவது, தனது அடுத்தப் படமும், ‘திரெளபதி’ போல தான் இருக்கும், உங்களால் என்ன செய்ய முடியும், என்று அவர் சூசமாக சொல்லியிருக்கிறார்.

 

இயக்குநர் மோகனின் இந்த பதிவுக்கு எதிர்ப்பும், ஆதரவும் பெரிகி வரும் நிலையில், நெட்டிசன்களில் ஒருவர், ”Firstu சாதிவெறி..இப்போ மதவெறியா...நீயெல்லாம் மனுஷனாடா....சினிமாவுல புது புது Ideas வைச்சு படம் எடுக்குறவங்களே காணாம போயிடுறாங்க...நீயெல்லாம் ரொம்ப வருஷத்துக்கு தாக்கு பிடிக்க மாட்ட உன் Calender"ல நோட் பண்ணி வைச்சுக்கோ...காவிய இயக்குனரே” என்று கமெண்ட் பதிவிட்டிருக்கிறார்.

Related News

6301

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery