விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், இசை வெளியீட்டு நிகழ்ச்சி வரும் மார்ச் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. நேரடி நிகழ்ச்சியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை மற்றும் விசாரணை குறித்து நடிகர் விஜய் பேசுவார், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் தயாரிப்பாளரின் வீட்டில் நேற்று முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த வருமான வரித்துறை சோதனையானது விஜய் ‘மாஸ்டர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் எதுவும் பேசக்கூடாது, என்பதற்காக நடைபெறுவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும், கொரோனா வைரஸை காரணம் காட்டி ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவுக்கு தடை போட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம், தொடர்ந்து தனது திரைப்பட நிகழ்வுகளில் அரசியல் பேசும் விஜயை, இந்த முறை பேச விடாமல் செய்வதற்காக பல்வேறு திட்டங்கள் போடப்பட்டிருப்பதாகவும், அப்படியே இசை வெளியீட்டு விழா நடந்தாலும், படம் ரிலீஸின் போது விஜய் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும், என்றும் கூறப்படுகிறது.
இப்படி பல முனைகளில் இருந்து விஜய்க்கு அழுத்தம் கொடுக்கப்படுவதால் அவர் சற்று தடுமாற்றம் அடைந்திருக்கிறாராம். மேலும், சரியான கதை கிடைக்காததால், தனது 65 வது படம் குறித்து முடிவு எடுக்க முடியாமலும் விஜய் திணறி வருகிறாராம்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...