தமிழ் சினிமாவில் சில தோல்விப் படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுவதோடு, அப்படம் ரூ.100 வசூலித்துவிட்டதாக, படம் வெளியான மூன்று நாட்களிலேயே போஸ்டர் ஒட்டுவார்கள். சம்மந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் இதை செய்யவில்லை என்றாலும், அப்படத்தில் நடித்த ஹீரோக்கள், தங்களது சொந்த செலவில் இதுபோன்ற போலி வெற்றி விழாவை நடத்தி விடுவார்கள். காரணம், அவர்களுக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக.
ஒரு படம் பெரிய வசூல் என்றால் தான், அடுத்தப் படத்தில் சம்பளத்தை உயர்த்த முடியும், என்பதற்காக ஹீரோக்கள் தங்களது தோல்விப் படங்களை கூட வெற்றிப் படங்களாக்கி விடுகிறார்கள். ஆனால், இதனால் தயாரிப்பாளர்கள் தான் பெரும் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அதனால், தமிழ் சினிமாவை பொருத்தவரை படங்களின் வசூல் என்பது மிக முக்கியம். அந்த வகையில், ரூ.100 கோடி வசூலை பெருஷாக பார்த்த தமிழ் சினிமா தற்போது ரூ.200 கோடிக்கு வந்திருக்கிறது. அதன்படி, ரூ.200 கோடி வசூலித்த ஹீரோக்கள் என்ற பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில், ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி ஹீரோவான அஜித் பெயர் இடம்பெறவில்லை.
அந்த பட்டியல் இதோ,
எந்திரன்
கபாலி
பேட்ட
2.0
தர்பார்
மெர்சல்
சர்கார்
பிகில்
ஐ
பாகுபலி2
அஜித்தின் ’விஸ்வாசம்’ ரூ 200 கோடி வசூல் என்று சொன்னாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை, என்பதால் அஜித்துக்கு இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லையாம்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...