சினிமாவில் கோடி கோடியாய் பல நடிகர்கள் சந்தித்தாலும், பிறகு உதவி செய்வது என்னவோ ஒரு சில நடிகர்கள் மட்டும் தான். அந்த ஒரு சிலரில் விஜய் சேதுபதியும் ஒருவர். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும், தன்னால் முடிந்த உதவியை செய்வதில் விஜய் சேதுபதி எப்பவுமே முதல் ஆளாக இருக்கிறார்.
அந்த வகையில், ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய லோகேஷ் பாபு, பல திரைப்படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு திடீரென்று பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த லோகேஷ் பாபுவுக்கு அறுவை சிகிச்சை செய்ய போதிய பணம் இல்லை, என்று அவரது நண்பர் குட்டி பாபு பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
பிறகு, லோகேஷுக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்ததாக குட்டி கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
தற்போது லோகேஷ் பாபுக்கு அறுவை சிகிச்சை முடிந்திருக்கும் நிலையில், அவரை நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று பார்த்திருக்கிறார். மேலும், லோகேஷின் அறுவை சிகிச்சைக்கு விஜய் சேதுபதி பணம் கொடுத்தும் உதவியதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் லோகேஷ் பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...