பிக் பாஸ் சீசன் 3 மூலம் பலர் பிரபலமாகியுள்ளார்கள். அதில், நிகழ்ச்சி தொடங்கப்பட்டதில் இருந்து பரபரப்பாக பேசப்பட்டவர் கவின். பிக் பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வந்த கவின், பல பெண் போட்டியாளர்களை காதலித்து வந்த நிலையில், இறுதியாக இலங்கை பெண் லொஸ்லியாவை காதலிக்க தொடங்கினார். லொஸ்லியாவும் கவினால் கவரப்பட்டதால், இந்த ஜோடி பிக் பாஸ் நிகழ்ச்சியின் டாப் ஜோடியாக வலம் வந்ததோடு, இவர்கள் மூலம் பல நாடகங்களும் பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும், கவின் - லொஸ்லியா ஜோடி தங்களது காதலை அதிகாரப்பூர்வவமாகாறிவிப்பார்கள், என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அவர் தங்களது வேலையில் மும்முரம் காட்ட, காதல் குறித்து எந்த இடத்திலும் பேசவில்லை.
மேலும், லொஸ்லியாவையும், கவினையும் ஜோடியாக வைத்து படம் எடுக்க பலர் முயற்சித்தார்கள். ஆனால், அப்படி வரும் திரைப்படங்களை லொஸ்லியா நிராகரித்து விட்டதாக கூறப்பட்டது. மேலும், அவ்வபோது தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட லொஸ்லியா, தற்போது ஹர்பஜன் சிங்கிக்கு ஜோடியாக ஒரு படத்திலும், ஆரிக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். கவினுக்கு ஜோடியாக நடிக்க நோ சொன்ன லொஸ்லியா, மற்றவர்களுக்கு எஸ் சொன்னது, கவின் ஆர்மியை கடுப்பாக்கிவிட்டது.
இந்த நிலையில், லொஸ்லியாவால் நிராகரிக்கப்பட்ட கவினுக்கு புது ஜோடி கிடைத்திருக்கிறது. ஆம், அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறாராம். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ‘பிகில்’ படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்த அம்ரிதா ஐயர் ஜோடியாக நடிக்கிறாராம்.

இந்த படத்திற்காக தான் லொஸ்லியாவை அனுகினார்களாம். ஆனால், அவர் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...