இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பிரவேசம் குறித்து பேசிய ரஜினிகாந்த், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர்களை சந்தித்தவர், இன்று திடீரென்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டல் ஒன்றில் தற்போது ரஜினிகாந்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் நோக்கம், மாவட்ட செயலாளர்களை சந்தித்தது குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தான், என்று கூறிய ரஜினிகாந்த், 1996 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக அரசியலில் என் பெயர் இழுக்கப்பட்டது. சிஸ்டம் சரிசெய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் நன்றாக இருக்காது. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை. முதலமைச்சர் பதவியை நான் எப்போதுமே நினைத்துப் பார்த்தது இல்லை. அரசியல் மாற்றத்துக்கு 3 திட்டங்களை வைத்துள்ளேன்.
தற்போதுள்ள நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தேர்தலுக்குப் பிறகு அவசியமான பதவிகள் மட்டுமே என் கட்சியில் இருக்கும்.
60 முதல் 65 சதவீதம் ஐம்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கே போட்டியிட வாய்ப்பு. புதியவர்கள் சட்டமன்றத்திற்குள் செல்ல நான் பாலமாக இருப்பேன்.
30 முதல் 35 சதவீதம் பல்வேறு துறை நிபுணர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை, என்பதே தனது கொள்ளை.” என்று தெரிவித்த ரஜினிகாந்த், தான் என்றுமே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது, என்றும் தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...