Latest News :

‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்! - பிரபலங்கள் நம்பிக்கை
Thursday March-12 2020

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் சில பெரும் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், சில சிறு முதலீட்டு படங்களும், அறிமுக இயக்குநர், நடிகர்கள் பங்குபெற்ற படங்களும் மிகப்பெரிய வெற்றியை சந்தித்து வருவதோடு, சினிமா துறையிலும், சமூகத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு படமாக உருவாகியிருக்கிறது ‘காவல்துறை உங்கள் நண்பன்’.

 

படத்தின் தலைப்புக்கும் காவல்துறைக்கு ஆதரவாக இருந்தாலும், படம் என்னவோ காவல்துறையின் கருப்பு பக்கத்தை காட்டுவதாக தான் இருக்கிறது. அதற்காக இப்படம் காவல்துறைக்கு எதிரான படம் அல்ல, காவல்துறையில் இருக்கும் சில காவலர்களின் கொடூரமான முகத்தையும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும், அதனால் பாதிக்கப்படும் சாமாணிய மக்களின் நிலையையும் எதார்த்தமாக சொல்வது தான் இப்படத்தின் கதை.

 

சுரேஷ் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் ரவீனா ஹீரோயினாக நடித்திருக்கிறார். மைம் கோபி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆர்.டி.எம் இயக்கியிருக்கும் இப்படத்தை பி.ஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் சார்பில் பி.பாஸ்கரன், பி.ராஜா பாண்டியன், சுரேஷ் கவி ஆகியோர், ஒயிட் மூன் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்கள். 

 

வரும் மார்ச் 20 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் சார்பில், ஜி.தனஞ்செயன் வெளியிடுகிறார். இப்படம் சமீபத்தில் பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் இப்படத்தை ஊடகங்களும், மக்களும் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்று வாழ்த்தியிருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில், “தற்போது திரையுலகம் பல முனைகளிலும் இருந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சினிமா டிக்கெட் மீது ஏற்கனவே அதிகப்படியான வரிவிதிப்பு இருக்கும் நிலையில், மத்திய அரசு மேலும் 8 சதவீத TDS வரி விதித்துள்ளது. நாங்கள் இப்போது மத்திய அரசிடம் இதனை  முறையிட டெல்லி செல்லவுள்ளோம். 10 சதவீத படங்களில்  மட்டுமே ஒரு வருடத்தில் பெரிய அளவில் வியாபாரம் நடக்கிறது. இன்று இங்கே தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஒரு நல்ல முயற்சியை கண்டுகொண்டு அதனை அடையாளப்படுத்தி மிகப்பெரிய அளவில் எடுத்து செல்கிறார். இது மற்ற தயாரிப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும்.” என்றார். 

 

நடிகர் மைம் கோபி பேசுகையில், “உண்மையில் இப்படம் ஒரு மிகப்பெரும் அனுபவமாக இருந்தது . இயக்குநர் RDM மிக நுண்ணிய, இதயம் அதிரும் சம்பவத்தை அழுத்தமாக திரையில் தந்துள்ளார். அதில் எனக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தந்ததற்கு நன்றி. சுரேஷ் ரவி மிக அற்புதமாக நடித்துள்ளார். அழகான ஒரு பையனாக இருந்து இரண்டாம் பகுதியில் முரட்டு தனமாக அவர் மாறுவதை கண்டு நீங்கள் ஆச்சர்யமடைவீர்கள். ரவீனா மிக அழகானதொரு நடிப்பை தந்திருக்கிறார். இப்படத்தில் அவரது நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். இப்படத்தின் ஆக்‌ஷன் பெரிய அளவில் பேசப்படும். படத்தின் க்ளைமாக்ஸ் பலரையும் அதிரவைத்து,  மனதில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.” என்றார்.

 

நாயகன் சுரேஷ் கவி பேசுகையில், “நானும் இயக்குநர் RDM இருவரும் 8 வருடங்களாக இணைந்து படம் செய்ய வேண்டும் என பேசிக்கொண்டிருந்தோம். இப்போது எங்கள் கனவு உண்மையாகியுள்ளது. எங்கள் படத்தை முன்வந்து வாங்கியதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. அவர் வெளியிட்ட பல படங்கள் தரமான கதையுடன், நல்ல பெயர் பெற்று வெற்றியடைந்துள்ளது. அந்த வகையில் “காவல்துறை உங்கள் நண்பன்” படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றாது. காவல்துறை பற்றிய நல்லவற்றை பல படங்கள் சொல்லிய நிலையில் இப்படம் அதன் வேறொரு முகத்தை காட்டும். எல்லாத்துறையிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும் இதில் நாங்கள் காவல்துறையின் காட்டப்படாத பக்கத்தை காட்டியுள்ளோம்.” என்றார்.

 

ஜி.தனஞ்செயன் பேசுகையில், “காவல்துறை உங்கள் நண்பன் படத்தை நான் ஃபாப்டா மாணவர்களுடன் சேர்ந்து பார்த்தேன். படம் எங்களை வியப்படைய செய்துவிட்டது. அளவான பட்ஜெட்டில் மிக தரமான படமாக உருவாகியிருக்கும் இப்படம் நிச்சயம் வெற்றி பெறுவதோடு, மக்களிடம் எளிதில் சென்றடையும். காரணம், மக்கள் தங்களது வாழ்க்கையில் கடந்திருக்கும் சம்பவங்களை தான் படமாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தை நான் இதுவரை 5 முறை பார்த்துவிட்டேன். அத்தனை முறையும் ஏதோ புதிய படம் பார்ப்பது போல விறுவிறுப்பாக உள்ளது. இந்த படத்தை பார்த்த அனைத்து பிரபலங்களும், படத்தை மக்களும், ஊடகங்களும் கொண்டாடுவார்கள், என்று கூறியிருக்கிறார்கள். நிச்சயம் இந்த படம் விமர்சன ரீதியாகவும், கமர்ஷியலாகவும் பெரிய வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

Related News

6310

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery