தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவது குறித்து பல ஆண்டுகள் பலர் பேசி வந்தாலும், ரஜினிகாந்த் வெளிப்படையாக அரசியல் குறித்து பேசாமல் இருந்தார். இதற்கிடையே, முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், தான் அரசியலில் ஈடுபடப் போவதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவித்தார்.
ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. இருப்பினும், தொடர்ந்து படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த ரஜினிகாந்த், தனது கட்சி குறித்து எதுவும் கூறாமல் இருந்த நிலையில், தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும், அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவோம், என்று அறிவித்தார். இதனால், ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவது உறுதி, என்று சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தார்கள்.
இப்படி, அவ்வபோது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், தனது அரசியல் கட்சி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மாறாக, திரைப்படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வந்தார். முன்பை விட அதிகமான திரைப்படங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் ரஜினிகாந்த், இளம் இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்கள் முன்பு தனது மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்திக்கப் போவதாக அறிவித்தார். இதனால், ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அவரது ரசிகர்களும் உற்சாகமடைந்தார்கள். ஆனால், மாறாக தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை, என்பதை ரஜினிகாந்த் சூசகமாக தெரிவித்தார்.
ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை, தான் தனத் அரசியல் கொள்கை என்று கூறிய ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வந்தாலும், முதலமைச்சராக மாட்டேன், இளைஞர்களுக்கு ஏணியாக மட்டுமே, இருப்பேன் என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் இந்த முடிவு அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றமடைய செய்தது.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் இந்த பேச்சின் எதிரொலியாக லண்டனில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. மேலும், சில வெளிநாடுகளில் உள்ள ரஜினி ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலை தமிழகத்திலும் விரைவில் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...