வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட், ‘கன்னி மாடம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் படத்திலேயே வியாபார ரீதியாக வெற்றி பெற்றதோடு, சமூகத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திய படத்தை இயக்கிய போஸ் வெங்கட்டுக்கு பாராட்டுடன் பல மிரட்டல்களும் வந்தது.
இது தொடர்பாக சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போஸ் வெங்கட், சாதி இல்லை, என்று சொன்னது தவறா?, அதை வலியுறுத்தி ஒரு படம் எடுத்ததற்காக என்னை மட்டும் இன்றி எனது குடும்பத்தையே கேவலமா திட்டுறாங்க, முடியல. ஆனால், என் அடுத்தப் படம் அப்படி ஒரு படமா இருக்காது, என்றாலும், மீண்டும் சமூகத்திற்கான படமாக நிச்சயம் இருக்கும், என்று தெரிவித்தார்.
போஸ் வெங்கட் கூறியது போலவே, தனது இரண்டாவது படத்தில் தமிழகத்தில் மட்டும் அல்ல, உலகத்திற்கு மிகப்பெரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுக்கும் தண்ணீர் பிரச்சினையை கையில் எடுத்தியிருக்கிறார்.
இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைக்களமாக இப்படத்தை போஸ் வெங்கட் கையாள உள்ளார்.
மூவ் ஆன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எம்.பி.மகேந்திரன், பி.பாலகுமார் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் கதை எழுதி போஸ் வெங்கட் இயக்க, பாஸ்கர் சக்தி திரைக்கதை வசனம் எழுதுகிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் ‘உரியடி’ புகழ் விஜயகுமார், பசுபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹரி சாய் இசையமைக்க, ஜியான் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். விவேகா பாடல்கள் எழுத, சிவசங்கர் கலையை நிர்மாணீக்கிறார். தினேஷ் சுப்பராயன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...