விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா எளிமையான முறையில் நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. ரசிகர்களின் படை சூழ தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவை நடத்தும் விஜய், இந்த முறை ரசிகர்களை தவிர்த்துவிட்டார். அதற்கு காரணம், பிகில் இசை வெளியீட்டு விழாவின் நடைபெற்ற சில மோதல் சம்பவங்களும், கொரோனா பீதியும் தான், என்பதை அவரே மேடையில் கூறினார்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய விஜய், ”லோகேஸ் கனகராஜுட்ன பணியாற்றிய ஆரம்ப நாட்களில் பயந்துவிட்டேன். சீன் பேப்பரே இல்லாமல் வேலை செய்கிறார்கள். இத பண்ணனும், அத பண்ணனும், என்று சொல்வார்களே தவிர, எதை எப்படி பண்ணனும் என்று சொல்ல மாட்டார்கள். இதனால், சில சமயங்களில் நான் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டேன். பிறகு நான் கேட்டுக்கொண்டதால் சீன் பேப்பர் கலாச்சாரத்திற்கு லோகேஷ் கனராஜ் வந்தார்.
நாம் எப்போதும் நதியாக இருக்க வேண்டும், நடி ஓடிக்கொண்டே இருக்கும் சிலர் பூ போட்டு வரவேற்பார்கள், சில விளக்கேற்றி வழிபடுவார்கள், நம்மை பிடிக்காத சிலர் கல்லெறிந்து விளையாடுவார்கள். ஆனால், எதையும் நாம் கண்டுக்கொள்ளாமல் நதி போல ஓடிக்கொண்டிருக்க வேண்டும். நல்லவனா இருந்தா சில சமயங்களில் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...