Latest News :

ஹரியும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை! - சூர்யா எடுத்த திடீர் முடிவு
Monday March-16 2020

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சூர்யா தனது 39 வது படத்தில் ஹரியும் இணைகிறார். ‘அருவா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. படத்தை தீபாவளீக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

மேலும், சூர்யாவின் 40 வது படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்றும் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ‘வாடிவாசல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

 

’அருவா’ படத்திற்கு முன்பாகவே ‘வாடிவாசல்’ படம் அறிவிக்கப்பட்டாலும், ’அருவா’ படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்கும் என்பதை படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ஏப்ரல் மாதம் அருவா படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்தனர். ஆனால், திடீர் முடிவாக இயக்குநர் ஹரியின் ‘அருவா’ மற்றும் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ இரண்டுக்கும் முன்பு வேறு ஒரு படத்தில் சூர்யா நடிக்க தொடங்கியிருக்கிறாராம்.

 

‘கூட்டத்தில் ஒருவன்’ என்ற படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்திற்கு ‘எலிவேட்டை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 8 ஆம் தேதி செஞ்சி அருகே தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை சத்தமில்லாமில் நடந்துக் கொண்டிருக்கிறது.

 

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். அதன்படி, இப்படத்தை முடித்த பிறகே ஹரியின் ‘அருவா’ படப்பிடிப்பில் சூர்யா கலந்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

Related News

6322

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery