கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கிரேன் அறுத்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேய் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் கமல், இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டது.
மேலும், கடந்த 3 ஆம் தேதி கமல்ஹாசன் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் நேரில் ஆஜரான கமல்ஹாசனிடம், சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், விசாரணை என்ற பெயரில் தன்னை காவல்துறை துன்புறுத்துவதாக கமல்ஹாசன், இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சம்பவம் நடந்த இடத்தில், சம்பவம் தொடர்பாக நடித்துக்காட்ட சொல்லி தன்னை காவல்துறை வற்புறுத்தி வருவதாக மனுவில் தெரிவித்துள்ள கமல்ஹாசன், தன்னை துன்புறுத்துவதை நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொள்வதாக தெரிவித்திருக்கும் நீதிபதி, மனு மீதான விசாரணையை இன்றே நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...