தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருக்கும் சன் தொலைக்காட்சியின் ஒரு அங்கமான சன் பிக்சர்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தொடங்கப்பட்டதும் பல படங்களை தயாரித்ததோடு, விநியோகமும் செய்தது. பிறகு ஆட்சி மாற்றம் காரணமாக, சில ஆண்டுகள் படங்கள் தயாரிப்பதையும், விநியோகம் செய்வதையும் நிறுத்தி வைத்திருந்த சன் பிக்சர்ஸ், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மீண்டும் படங்கள் தயாரிப்பில் ஈடுபட்டது.
அந்த வகையில், சன் பிக்சர்ஸ் தனது இரண்டாம் இன்னிங்சில் தயாரிக்கும் அத்தனை படங்களும் மிகப்பெரிய ஹிட்டாகி வருகிறது. அதற்கு காரணம், படங்களுக்கு சன் பிக்சர் கொடுக்கும் விளம்பரங்கள் தான்.
தற்போது ரஜினியை வைத்து ‘அண்ணாத்த’ படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ், அடுத்ததாக ராகவா லாரன்ஸை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது. மேலும், தனுஷை வைத்து ஒரு படத்தையும், சூர்யா நடிப்பில் ஒரு படத்தையும் தயாரிக்க திட்டமிட்டுள்ள சன் பிக்சர்ஸ் விஜயின் 65 வது படத்தையும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தை சன் பிக்சர்ஸ், மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதோடு, விஜய் சேதுபதி நடிக்கும் படத்தையும் தயாரிக்க இருக்கிறதாம். இப்படி தொடர்ந்து கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதிக படங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்ற பெருமையை பெரும் என்பது உறுதி.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...