Latest News :

கள்ளத்தொடர்பு விவகாரம்! - சிக்கலில் சீரியல் நடிகை
Wednesday March-18 2020

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகை ஜெயஸ்ரீ, தனது கணவரான சீரியல் நடிகர் ஈஸ்வருக்கும், நடிகை மகாலக்‌ஷ்மிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து இரு தரப்பினரும் மாற்றி புகார்கள் கூறி வந்த நிலையில், ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்றார். இந்த பிரச்சினையின் பரபரப்பு ஓய்வதற்குள் மின்னல் தீபா என்ற சீரியல் நடிகையும் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் சிக்கினார்.

 

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தீபா, சிட்டி பாபு என்பவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இவர்களது கள்ளத்தொடர்பு விவகாரம் வெளியே தெரிய வந்தது. மேலும், சிட்டி பாபு, தீபாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டர். ஆனால், இதை மறுத்த தீபா, அவர் எங்கள் குடும்ப நண்பர், அவர் தான் என்னை காதலிப்பதாக வற்புறுத்துகிறார், என்று கூறினார். அதே சமயம், இது தொடர்பாக தீபா காவல்துறையில் எந்தவித புகாரும் அளிக்கவில்லை.

 

இப்படி சீரியல் நடிகைகள் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் சிக்குவது தொடர் கதையாகி வரும் நிலையில், தற்போது மற்றொரு பிரபல சீரியல் நடிகையும் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பல சீரியல்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்த ஹரிபிரியா, சீரியல் நடிகர் விக்னேஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹரிபிரியா கணவரை பிரிந்துவிட்டார். தற்போது ‘கண்மணி’ சீரியலில் நடித்து வரும் ஹரிபிரியா, நிகழ்ச்சி தொகுப்பாளர் அசாத் என்பவருன் நெருக்கமாக பழகி வருவதாகவும், அவரது விவாகரத்துக்கு அசாத் தான் காரணம், என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Serial Actress Haripriya

 

மேலும், அசாத்துடன் ஹரிபிரியா கோவிலுக்கு சென்றிருக்கும் சில புகைப்படங்கள் வெளியாக, அந்த புகைப்படங்களை வைத்து இருவரும் காதலித்து வருவதாகவும், அசாத்தை தான் ஹரிபிரியா இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

ஆனால், இதை மறுத்திருக்கும் ஹரிபிரியா, நாங்கள் மதம், ஜாதி வேறுபாடு பார்க்காமல் நல்ல நண்பர்களாக பழகுகிறோம். இதனை தவறாக புரிந்துக் கொண்ட சிலர், களத்தொடர்பு போன்ற விஷயங்களை பரப்பி வருகிறார்கள். எங்களுக்கு தெரியும் நாங்கள் யார் என்று, நாங்கள் எப்போதும் நண்பர்கள் தான், என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

Related News

6329

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery