’பிப்ரவரி 14’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அஜ்மல், ‘அஞ்சாதே’ படம் மூலம் அனைவரும் அறிந்த நடிகராக உருவெடுத்தார். அப்படத்தை தொடர்ந்து ‘TN 07 AL 4777’, ‘திரு திரு துறு திறு’, ‘கோ’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்தவர், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றுக்காக அஜ்மல் ஒப்பந்தமாகியிருக்கிறார். திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் பெரும் திருப்பம் ஏற்படுத்தும் முக்கியமான கதாப்பாத்திரமாக அஜ்மலின் கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறதாம்.
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இப்படத்தை மிலிந்த் ராவ் கதை எழுதி இயக்குகிறார். கிரிஷ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...