சினிமா துறையில் பல சங்கங்கள் இருந்தாலும், நடிகர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் என்றால் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது. இந்த இரண்டு சங்கங்களுக்கும் அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்திருக்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வரும் ஜூன் மாதம் தேர்தல் வைத்துக் கொள்ளலாம், என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல முன்னணி தயாரிப்பாளர்கள் தலைமையில் அணிகள் உருவாகி வருகின்றன.
தற்போது வரை 4 அணிகள் இந்த தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு, சத்யஜோதி தியாகராஜன், ஞானவேல்ராஜா ஆகியோரது தலைமையில் ஒரு அணியும், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணி, ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணி என மூன்று அணிகள் உருவாகி வருவதாக கூறப்பட்ட நிலையில், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையிலான அணி, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி’ என்ற பெயரில் போட்டியிடும் இந்த அணியில் தலைவர் பதவிக்கு டி.சிவா போட்டியிடுகிறார்.
பி.எல்.தேனப்பன் மற்றும் ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோர் செயலாளர் பதவிக்கும், முரளிதரன் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். ஆர்.கே.சுரேஷ் மற்றும் ஜி.தனஞ்செயன் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிருகிறார்கள்.
கே.ராஜன், ராதாரவி, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், சித்ரா லக்ஷ்மண், எச்.முரளி, எஸ்.எஸ்.துரைராஜ், கே.விஜயகுமர், ஆர்.வி.உதயகுமார், மனோஜ்குமார், கே.நந்தகோபால், மனோபாலா, பாபு கணேஷ், பஞ்சு சுப்பு, எம்.எஸ்.முருகராஜ், வினோத்குமார், ரங்கநாதன், பஞ்ச் பாரத், மதுரை செல்வம் மற்றும் மேலும் மூன்று தயாரிப்பாளர்கள் என 21 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...