தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரித்ததால், படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வந்தவர், தற்போது உடல் எடை குறைந்ததால் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, அனுஷ்காவின் திருமணம் பற்றி அவ்வபோது வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நடிகர் பிரபாஷுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட அனுஷ்கா, பிறகு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. அதன் பிறகு, முன்னணி இயக்குநர் ஒருவரது மகனை அனுஷ்கா திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இவை அனைத்தையும் அனுஷ்கா மறுத்து விளக்கம் அளித்தாலும், அவரது திருமணம் பற்றிய வதந்திகள் வெளியாவது தொடர்கதையாகவே இருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் அனுஷ்காவிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு, அவர் மிகவும் கோபமடைந்து விட்டார். திருமணத்தை விட்டுத்தள்ளுங்க, அது நடக்கும் போது நானே அறிவிபேன், என்று கடுப்பாக பதில் அளித்தார்.
மேலும், காதல் குறித்து பேசிய அனுஷ்கா, 2008 வருடத்தில் நான் ஒருவரை காதலித்தேன். அந்த உறவு அருமையானது. எனக்கு அது மிகவும் ஸ்பெஷலானது. அவர் என் மனதுக்கு பிடித்தவராகவும், என் மரியாதைக்குரியவராகவும் இருப்பதால் அவர் யார்? என்பதை கூற மாட்டேன், என்றும் தெரிவித்திருக்கிறார்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...