கொரோனா வைரஸால் உலக நாடுகள் பல ஆட்டம் கண்டு வருகிறது. வல்லரசு நாடுகளே இந்த வைரஸால் விழி பிதுங்கி நிற்கும் நிலையில், இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 166 தாண்டியுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் பல்வேறு முன் எச்சரிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதோடு, தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதேபோல், சில பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இளம் நடிகை ஒருவர் கொரோனா பாதிப்பால் தனது திருமணத்தை சத்தமில்லாமல், மக்கள் கூட்டம் இல்லாமல் நடத்தியிருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘உறியடி 2’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் விஷ்மயா. கேரள மாநிலத்தை சேர்ந்த மாடலான இவர், இப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்காத விஷ்மயா, பிரபல மலையாள பாடகர் அபிஜித்தை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
கொல்லத்தில் நடைபெற்ற விஷ்மயா - அபிஜித் திருமணத்தில் இருவரது குடும்பத்தார் மட்டுமே கலந்துக் கொண்டார்கள். கொரோனா பீதியால் திருமணத்திற்கு யாரையும் அழைக்காத இவர்கள், கொரோனாவில் இருந்து கேரளா விடுபட்ட பிறகு, தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வரவேற்பு செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...