தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் தொடர் தோல்விப் பெற்று வந்த நிலையில், ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படம் வெற்றி பெற்றது. இருப்பினும், அப்படத்தை தொடர்ந்து வெளியான ‘ஹீரோ’ மிகப்பெரிய தோல்வியடைந்தது. மேலும், கதை திருட்டு விவகாரத்திலும் அப்படம் சிக்கியது.
போஸ்கோ பிரபு என்ற உதவி இயக்குநர் ‘ஹீரோ’ படத்தின் கதை தன்னுடைய என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஹீரோ’ படத்தை பிற மொழிகளில் வெளியிட இடைக்கால தடை விதித்ததோடு, சாட்டிலைட் உரிமையும் விற்க கூடாது, என்று உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ‘சக்தி’ என்ற தலைப்பில் வரும் மார்ச் 20 ஆம் தேதி (நாளை) ஆந்திராவில் வெளியாக இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் போஸ்கோ பிரபு, நீதிமன்றம் ‘ஹீரோ’ படத்தை பிற மொழிகளில் வெளியிட தடை விதித்திருக்கும் நிலையில், அப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல், என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் திரையரங்கம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...