‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கிஷோர், தொடர்ந்து ‘ஆடுகளம்’, ‘விசாரணை’ போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராகியுள்ளார்.
கிஷோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘யார் இவன்’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள நிலையில், அவர் ஹீரோவாக நடித்துள்ல ‘களத்தூர் கிராமம்’ விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ரஜினி மற்றும் கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், “ரஜினி, கமல் இருவரும் நல்ல நடிகர்கள். சினிமா மூலம் மக்களைச் சென்றடைந்தவர்கள். இப்போது சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நன்மை செய்து வருகிறார்கள்.
எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறார்கள். இது வரவேற்க வேண்டிய விஷயம்தான். கமல், அரசியலுக்கு ஏற்கனவே வந்து விட்டதாக சொல்லிவிட்டார். ரஜினியும் வர வேண்டும். ரஜினியும், கமலும் நேரடி அரசியலுக்கு வந்து தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை.” என்றார்.
கமலுடன் ’தூங்காவனம்’ படத்தில் நடித்த கிஷோர், ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்துள்ளார்.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...