கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சேரன் நடிப்பில் வெளியான படம் ‘ராஜாவுக்கு செக்’. சாய் ராஜ்குமார் எழுதி இயக்கிய இப்படத்தை மலையாள தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்திருந்தனர்.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமையை மையமாக வைத்து உருவான இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், வியாபார ரீதியாக தோல்வியை தழுவியது. அதே சமயம், சில யுடியுப் விமர்சகர்கள், படத்திற்கு எதிராக மிக கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
இந்த நிலையில், இப்படம் தொடர்பாக பெண் ஒருவர், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சேரன், “அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை… எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன்ல டயலாக் இருக்கும்.. அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா…. அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க… வயிறு எரியுதும்மா.. சும்மா விடாது எங்களோட உழைப்பு…” என்று பதிவுட்டுள்ளார்.
சேரனின் பதிவுக்கு கமெண்ட் போட்ட அந்த பெண், ”உண்மைதான் சார்..நல்லபடியாக ரீச்சாகி இருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்…இன்னும் பத்து வருடங்கள் கழித்து “ராஜாவுக்கு செக்” படம்போல வருமான்னு பேசுவாங்க…Worried face” என்று தெரிவித்தார்.
மேலும், பலர் சேரனின் பதிவுக்கு வரவேற்பு தெரிவித்ததோடு, ‘ராஜவுக்கு செக்’ படத்தை பாராட்டியும் வருகிறார்கள்.
பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்யும் சில யுடியுப் விமர்சகர்கள், பணம் கொடுக்கவில்லை என்பதால், ‘ராஜாவுக்கு செக்’ படத்தை கடுமையாக விமர்சனம் செய்ததை தான், சேரன், “காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க” என்று குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...