தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜயின் படங்கள் தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் எதிர்ப்பார்ப்புக்குள்ளாகி வருகிறது. காரணம், அவர் தனது ஒவ்வொரு படங்களிலும் பேசப்படும் அரசியல் தான். மாநில அரசு மட்டும் இன்றி மத்திய அரசின் திட்டங்களையும் தனது படங்களில் விஜய் விமர்சித்து வருகிறார்.
இதற்கிடையே, விஜயிடம் வருமான வரித்துறை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடத்திய விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படப்பிடிப்பு தளத்திற்கே சென்ற அதிகாரிகள், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விஜயை அங்கிருந்து அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
இந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியதோடு, இது அரசியல் பின்னணி காரணமாக நடத்தப்பட்ட ரைடு என்றும் பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தார்கள்.
இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய், தன்னிடம் வருமான வரித்துறை நடத்திய விசாரணை மற்றும் சோதனை குறித்து பேசுவார், என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் எதுவும் பேசவில்லை. ஒரு இடத்தில் மட்டும், 20 வருடங்களுக்கு முன்பு, ரைடு இல்லாமல் நல்லபடியாக இருந்தே, இப்போதும் நல்ல தான் இருக்கேன், என்று கூறினார்.
விஜயின் அமைதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த நிலையில், விஜய் பேசாமல் இருந்ததற்கான காரணத்தை பிரபல தயாரிப்பாளர் கே.ராஜான் கூறியிருக்கிறார்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கே.ராஜன், வருமான வரித்துறை சோதனையால் விஜய் மனதளவில் கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் தான், அவர் மாஸ்டர் நிகழ்ச்சியில் எதுவும் பேசவில்லை. அதுமட்டும் அல்ல, வருமான வரித்துறை நடத்திய இந்த ஒரே சோதனை மூலம் விஜய் பயந்துவிட்டார், என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...