குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய மீனா, தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்ததோடு, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், கார்த்திக், சத்யராஜ், என்று அவர் ஜோடி போடதா நடிகர்களே இல்லை, என்று சொல்லும் அளவுக்கு இரண்டு தலைமுறை நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததும் திருமணம் செய்துக் கொண்டு சிறிது காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த மீனா, குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார். மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் அக்கா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்த மீனா, தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியின் ‘அண்ணாத்தே’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஹீரோவுக்கு அக்கா, அண்ணி போன்ற வேடங்களில் நடிக்கும் மீனா, அம்மா வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன், என்று கூறியிருக்கிறார். மேலும், கோடி ரூபாய் கொடுத்தாலும் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கவே மாட்டேன். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், சினிமாவை விட்டே விலகிடுவேன், என்று தெரிவித்துள்ளார்.
‘கரோலினாவும் காமாட்சியும்’ என்ற வெப் சீரிஸில் நடித்த மீனா, தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடிக்க விரும்புகிறார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...