ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது படங்கள் மிகப்பெரிய வியாபரத்தை கொண்டிருக்கிறது. ரஜினி மற்றும் விஜய் இருவரும் தங்களது படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், அவர்களது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு ஏற்படுவதோடு, வசூலும் அதிகரிக்க செய்கிறது.
விஜயின் ‘பிகில்’ படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தது. அதனால், அவரது மாஸ்டர் படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே வியாபாரம் முடிந்துவிட்டது. சுமார் ரூ.230 கோடிக்கு மாஸ்டர் வியாபாரம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் நடித்து வரும் ‘அண்ணாத்தே’ படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது விஜயும், ரஜினிகாந்தும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்கள். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், ரஜினிகாந்தும் ‘அண்ணாத்தே’ படத்திற்குப் பிறகு நடிக்கும் படத்தை முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் புதிய படத்தை, அதாவது அவரது 169 படத்தை விஜயின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்து முடித்திருக்கும் சேவியர் பிரிட்டோ, தொடர்ந்து பல பெரிய முதலீட்டு படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். அதன்படி, அவர் ரஜினி படத்தை தயாரிக்கு முயற்சியில் ஈடுபட, ரஜினியும் அவருக்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...