கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலா பாலுக்கு 2 வது திருமணம் நடந்ததாக, தகவல் வெளியானதோடு, அவர் திருமணம் செய்துக் கொண்டதாக சொல்லப்பட்ட பாடகர் பவீந்தர் சிங், தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில், அமலா பாலின் திருமணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திருமணமான தகவலை மறுத்திருக்கும் அமலா பால், அந்த புகைப்படங்கள் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும், பவீந்தர் அந்த புகைப்படங்களை எதற்காக வெளியிட்டார், என்பது தனக்கு தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
அதே சமயம், புகைப்படங்களை வெளியிட்ட சில மணி நேரங்களில் பவீந்தர் சிங், நீக்கிவிட்டார். மேலும், பவீந்தர் சிங்கை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்த அமலா பால், தற்போது அதில் இருந்து வெளியேறியும் விட்டார். விசாரித்ததில், பவீந்தர் சிங்கை அமலா பால் காதலித்து வந்ததும், இருவரும் நெருக்கமாக இருந்ததும் உண்மை தான். ஆனால், திருமணம் ஆவது போன்ற புகைப்படங்களை அமலா பால் ரகசியமாக வைத்திருக்க, பவீந்தர் அதை வெளியிட்டுவிட்டதால், அவர் மீது அமலா பால் கோபத்தில் இருக்கிறாராம்.

எனவே, பவீந்தர் சிங்கின் காதலை கட் பண்ணய அமலா பால், தற்போது அவரது தொடர்பு எல்லையை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...