தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ராதிகா, சீரியல் உலகிலும் ராணியாக வலம் வந்தார். இவர் தயாரித்து நடித்த ‘சித்தி’ சீரியல் திரைப்படங்களுக்கு நிகராக இருந்ததோடு, சீரியல் பார்க்காதவர்களையும் கவர்ந்தது. அந்த சீரியலை தொடர்ந்து பல சீரியல்களை தயாரித்து வந்த ராதிகா, கடந்த சில ஆண்டுகளாகவே சீரியல் உலகில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.
பிரம்மாண்டமான முறையில் தயாரித்து நடித்த சீரியலை பாதியிலேயே நிறுத்திய ராதிகா, சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு ‘சித்தி 2’ சீரியலை தொடங்கினார். இந்த சீரியல் ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் 5 இடங்களை பிடித்ததால், சித்தி 2 சீரியல் குழுவும், ராதிகாவும் உற்சாகமடைந்தனர்.
இந்த நிலையில், முதல் வாரத்திற்குப் பிறகு ‘சித்தி 2’ சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங் சரிய தொடங்கியது. தற்போது வரை முதல் 5 இடத்தை பிடிக்க முடியாமல் ‘சித்தி 2’ சீரியல் திணறி வருவதால், ராதிகா வருத்தமடைந்திருக்கிறாராம்.
மேலும், சித்தி 2 சீரியலின் டி.ஆர்.பி உயர்வடையாமல், இந்த நிலை தொடர்ந்தால், அந்த சீரியலின் நேரத்தை தொலைக்காட்சி மாற்றக்கூடும் என்ற பேச்சு அடிபடுவதால், ராதிகா சீரியல் உலகில் காணமால் போகும் நிலை உருவாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...